×

புளியங்குடி பகுதிகளில் நாளை மின்தடை

புளியங்குடி, ஜூன் 14: கடையநல்லூர் செயற்பொறியாளர் ஆதிலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, புளியங்குடி துணை மின் நிலையங்களில் நாளை 15ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிப்பட்டி, சங்கனாபேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூர், திரிகூடபுரம், சொக்கம்பட்டி, மேலபுளியங்குடி, முள்ளிகுளம், தலைவன்கோட்டை, நகரம், மலையடிக்குறிச்சி, வெள்ளக்கவுன்டன்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (15ம்தேதி)காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. எனவே மேற்படி கிராமங்களில் மின்கம்பிகளில் தொடும் நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post புளியங்குடி பகுதிகளில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Puliangudi ,Kadayanallur ,Executive Engineer ,Adilakshmi ,Chintamani ,Ayyapuram ,Rajagopalaperi ,Ratnapuri ,
× RELATED இந்திய யோகா அணிக்கு கடையநல்லூர் பள்ளி மாணவர் தேர்வு