×

புளியங்குடியில் கார் திருடிய இருவருக்கு ஓராண்டு சிறை

சிவகிரி, ஜூன் 14:புளியங்குடியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் கடந்த 2013ம் ஆண்டு தனது காரை புளியங்குடி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் காரை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கரத்தினம் மகன் ராஜேஷ் (37), சென்னை கொருக்குப்பேட்டை அண்ணாதுரை மகன் திலிப்ராஜா (35) ஆகியோர் காரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அப்போதைய இன்ஸ்பெக்டர் கோவிந்தன் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார். வ்வழக்கு விசாரணை சிவகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி காளீஸ்வரி விசாரணை நடத்தி ராஜேஷ், திலிப் ராஜா ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த புளியங்குடி போலீசாருக்கு எஸ்பி சுரேஷ்குமார் பாராட்டு தெரிவித்தார்.

The post புளியங்குடியில் கார் திருடிய இருவருக்கு ஓராண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Buliangudi ,Sivagiri ,Mahesh ,Puliangudi ,Puliangudi police ,
× RELATED மரத்தில் கார் மோதி ராணுவ வீரர், நண்பர் பலி