×

திண்டுக்கல்- தாடிக்கொம்பு ரோட்டில் திறந்தே கிடக்கும் பெரும் பள்ளம் விபத்து ஏற்படும் முன் விழிப்பு தேவை

திண்டுக்கல் ஜூன் 14:திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பஸ் ஸ்டாப் முன்பு பல நாட்களாக பாதாள சாக்கடை பள்ளம் மூடப்படாமல் திறந்தே உள்ளது. இந்த வழியாக தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பள்ளி மாணவ- மாணவிகளும் அதிகளவில் வந்து செல்கின்றன. மேலும் பஸ் ஸ்டாப் முன்பு பள்ளம் உள்ளதால் பயணிகள் பஸ் ஏற சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக குச்சியை நட்டு வைத்துள்ளனர். எனவே பெரும் விபத்து ஏற்படும் முன் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post திண்டுக்கல்- தாடிக்கொம்பு ரோட்டில் திறந்தே கிடக்கும் பெரும் பள்ளம் விபத்து ஏற்படும் முன் விழிப்பு தேவை appeared first on Dinakaran.

Tags : Dindigul-Thadikombu road ,Dindigul ,Dindigul Thadikkombu Road ,Govt High School ,Dindigul-Tadikkumbu road ,Dinakaran ,
× RELATED ரூ.4.68 கோடி முறைகேடு விவகாரம்...