×

பட்டாசு ஆலை விபத்துக்களை தடுக்க

சிவகாசி, ஜூன் 14: பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில் சிவகாசியில் பட்டாசு ஆலை சங்க நிர்வாகிகளுடன் பெசோ அதிகாரி குமார் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இதில் சில பட்டாசு ஆலைகளில் கடந்த சில மாதங்களாக தொடர் வெடி விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

பட்டாசு வெடி விபத்துகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் 4 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு அமைத்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. விதிமீறும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னர் தற்போது வெடி விபத்துக்கள் இல்லாமல் பட்டாசு தொழில் நடந்து வருகின்றது.

இந்த நிலையில் நாக்பூரில் உள்ள பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை தலைமை அதிகாரி குமார் நேற்று காலை சிவகாசியில் உள்ள பெசோ அலுவகத்துக்கு திடீரென வந்தார். அவர் அங்குள்ள பட்டாசு ஆலை சங்க நிர்வாகிகளுடனும், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். பட்டாசு ஆலை வெடி விபத்துத்துக்களை தடுக்க ஆலோசனை வழங்கினார்.

The post பட்டாசு ஆலை விபத்துக்களை தடுக்க appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Peso ,Adhikari Kumar ,Firecracker Factory Association ,Virudhunagar district ,Firecracker Factory ,Dinakaran ,
× RELATED சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி