×

அரசு மீன்வள கல்லூரி மாணவிகளுக்கு அரியமான் கடலில் நீச்சல் பயிற்சி

மண்டபம், ஜூன் 14: அரியமான் கிராம பகுதியில் அரசு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகளுக்கு கடலில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோன் வலசை ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட கடலோர பகுதியான அரியமான் கிராம பகுதியில் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழிற்சார் பயிற்சி இயக்கத்தில் பயின்று வரும் மீன்பிடித் தொழில் நுட்பக் கல்லூரி மாணவிகளுக்கு கடலில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது மாணவிகளுக்கு லைப் ஜாக்கட் என்ற பாதுகாப்பு கவசம் அளிக்கப்பட்டு பயிற்சியாளர் சுகந்தி கடலில் நீந்துவது குறித்தும், குளம்,ஓடை,கடல்,ஆறு போன்றவைகளில் நீரில் சிக்கினால் தன்னை எப்படி காப்பாற்றி கொள்வது, ஆபத்தில் சிக்கும் மற்றவர்களை எப்படி பாதுகாப்பாக மீட்பது குறித்து பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் கல்லூரி உதவி பேராசிரியர் கலையரசன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பயிற்சி குறித்து விளக்கம் அளித்தார். பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சியில் கேப்டன் சகாயரெக்ஸ், பொறியாளர் சிவசுடலை மணி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post அரசு மீன்வள கல்லூரி மாணவிகளுக்கு அரியமான் கடலில் நீச்சல் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Ariyaman ,Government Fisheries College ,Mandapam ,Government Fisheries University ,Mandapam Union Chattakon Valasai Panchayat ,
× RELATED சவுக்கு காட்டுக்குள் பயிற்சி நிலையம்...