×

காவு வாங்கும் கருவேல மரங்கள்

 

தொண்டி, ஜூன் 14: கிழக்கு கடற்கரை சாலையில் உப்பூர் முதல் எஸ்.பி.பட்டிணம் வரையிலும் சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்து அடிக்கடி விபத்து நடக்கிறது. உயிர்பலியும் ஏற்படுவதால் அகற்ற வேண்டும் எ்ன பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டுக்கோட்டை ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையில் எஸ்.பி.பட்டணம், வட்டாணம், தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, உப்பூர் உள்ளிட்ட பகுதியில் சாலையின் இருபுறமும் காட்டு கருவை அதிகமாக வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.

எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட்டு ஒதுங்கும் போது அடிக்கடி விபத்து நடக்கிறது. சில தினங்களுக்கு முன்பு தொண்டி அருகே டூவீலரில் சென்ற இருவர் ரோட்டின் ஓரத்தில் உள்ள காட்டு கருவேல மரத்திற்குள் புகுந்து உள்ளே இருந்த கம்பத்தில் மோதி ஒருவர் பலியானார். இதேபோன்ற சம்பவம் தினமும் இப்பகுதியில் நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் ரோட்டின் ஒரத்தில் இருக்கும் கருவேல மரத்தை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது குறித்து தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா கூறியது, அரசு மற்றும் பட்டா இடங்களில் உள்ள காட்டு கருவேல மரத்தை அகற்ற மாவட்ட ஆட்சியர் கடும் உத்தரவிட்டார். அதேபோல் அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் உயிரை காவு வாங்கும் ரோட்டின் இருபுறமும் உள்ள கருவேல மரத்தை அகற்றவும் நவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சி சார்பில் காட்டு கருவேல மரங்களை அகற்ற உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றார்.

The post காவு வாங்கும் கருவேல மரங்கள் appeared first on Dinakaran.

Tags : East Coast Road ,Uppur ,SB Pattinam ,Pattukottai Rameswaram ,
× RELATED கோவளத்தில் கடற்கரையில் காணாமல் போன...