×

வருமான வரி பிடித்தம் கண்டித்து ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

திருவாரூர், ஜூன் 14: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மாதாந்திர வருமான வரி பிடித்தம் செய்வதை கைவிடக்கோரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தாமாகவே மாதாந்தோறும் வருமான வரி பிடித்தம் செய்வதை கைவிட்டு பழைய நடைமுறையை மீண்டும் அமல்படுத்திட வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் 20 முதல் 40சதவீதம் மட்டுமே கட்டணத் தொகை அனுமதிக்கப்படுவதால் முழு காப்பீட்டு தொகையும் வழங்கி கட்டணமில்லா சிகிச்சை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று மாவட்ட கருவூல அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தினர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் வீரமணி, மாவட்ட செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். கீழக்கூத்தங்குடி, நாரணமங்கலம், மாங்குடி, வடகரை, ராதாநல்லூர், கடுவங்குடி, திருநெய்பேர், கல்யாணசுந்தரபுரம், குன்னியூர், வேப்பத்தாங்குடி, வஞ்சியூர், திருக்காரவாசல், பின்னவாசல், உமாமகேஸ்வரபுரம் மற்றும் புதூர் ஆகிய கிராமங்களுக்கும் என மொத்தம் 3 நாட்கள் நடைபெற்றது. ஜமாபந்தி நிகழ்ச்சியானது நேற்றுடன் முடிவடைந்தது.

The post வருமான வரி பிடித்தம் கண்டித்து ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tamil Nadu ,
× RELATED எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்ற 22 போலீசாருக்கு எஸ்பி பாராட்டு