×

ஜெயங்கொண்டத்தில் சாலையோரங்களில் பள்ளங்களை சீரமைத்த போக்குவரத்து போலீசார்

 

ஜெயங்கொண்டம், ஜூன் 14: ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் சாலையை சீரமைப்பு பணியில் போக்குவரத்து காவல்துறை போலீசார் ஈடுபட்டனர். ஜெயங்கொண்டத்தில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையினால் கும்பகோணம் ரோட்டில் சாலை ஓரங்களில் பல இடங்களில் குண்டும் குழியுமாக சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சாலையை கடக்க சிரமப்பட்டு சென்று வந்தனர்.

பள்ளி செல்லும் நேரத்திலும், பள்ளி விடும் நேரத்திலும் சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. இந்த போக்குவரத்தால் தாமதப்படுவதை தவிர்க்கும் விதமாக போலீசார் டிராக்டர்களில் மணல் கொண்டு வந்து குண்டும் குழிகளை நிரப்பி பொக்லைன் இயந்திரம் மூலம் கொண்டு சாலைகளை சீரமைத்து வருகின்றனர். இப்பணிகளை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் தலைமையில் போக்குவரத்து போலீசார் செய்தனர். இதனால் போக்குவரத்தை சிறிதளவு சீரமைக்க முடியும், சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க முடியும் போலீசார் தெரிவித்தனர்.

The post ஜெயங்கொண்டத்தில் சாலையோரங்களில் பள்ளங்களை சீரமைத்த போக்குவரத்து போலீசார் appeared first on Dinakaran.

Tags : Jayangondal ,JAYANGONDAM ,Jayangondai ,Kumbakonam Road ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட...