×

சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு

மொடக்குறிச்சி, ஜூன் 22: மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று 2வது நாளாக நடைபெற்றது. மொடக்குறிச்சி தாலுகாவில் மொடக்குறிச்சி, அரச்சலூர், அவல்பூந்துறை ஆகிய மூன்று உள்வட்டங்கள் உள்ளன. இதில், நேற்று முன்தினம் மொடக்குறிச்சி உள் வட்டத்திற்குட்பட்ட ஜமாபந்தி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, 2வது நாளான நேற்று அரச்சலூர் உள்வட்டத்திற்கான ஜமாபந்தி நடைபெற்றது. இந்த ஜமாபந்திக்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பிரேமலதா தலைமை தாங்கினார்.

மொடக்குறிச்சி தாசில்தார் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இதில் இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல், குடும்ப அட்டை உள்ளிட்ட 98 மனுக்கள் பெறப்பட்டது. 25ம் தேதி அவல்பூந்துறை உள் வட்டத்திற்குப்பட்ட பகுதிக்கு ஜமாபந்தி நடைபெறும் என தாசில்தார் சந்திரசேகர் தெரிவித்தார். இந்த ஜமாபந்தியில் ஆர்ஐக்கள் மொடக்குறிச்சி யுவராணி, அவல்பூந்துறை சத்யா, அரச்சலூர் பிரபு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Observance of ,International Yoga Day ,Modakurichi ,Jamabandhi ,Modakurichi taluk ,taluk ,of ,Dinakaran ,
× RELATED உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா பயிற்சி