×

மதுபாட்டில் விற்றவர் கைது

 

தா.பழூர், ஜூன் 14: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் செட்டி திருக்கோணம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் . அப்பொழுது அங்கு மறைத்து வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி செட்டி திருக்கோணம் காலனிதெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் ( 51 ) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர் .

அப்பொழுது அவரது வீட்டின் பின்புறம் இருந்து விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்பு இது குறித்து வழக்கு பதிவு செய்து அனுமதி இன்றி வீட்டில் மறைத்தே வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மதுபாட்டில் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tha.Pazhur ,Ariyalur District ,Vikramangalam ,Assistant Inspector ,Saravanan ,Chetti Thirukonam ,Dinakaran ,
× RELATED உணவை தேடி கிராமப்புற பகுதிக்கு வரும்...