×

தோகைமலை அருகே மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி

 

தோகைமலை, ஜூன் 14: தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சி நல்லாக்கவுண்டம்பட்டி கார்த்திக்கேயன் (33). இவர் தஞ்சாவூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் இஞ்சினியராக வேலை செய்து வந்து உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்ற கார்த்திக்கேயன் மீண்டும் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்து உள்ளார். அப்போது திருச்சி தோகைமலை மெயின் ரோட்டில் ஆர்டிமலை பகுதியில் உள்ள நாயக்கர் தோட்டம் வளைவு பாலம் அருகே வந்தபோது, நிலை தடுமாறிய கார்த்திக்கேயன் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி உள்ளார்.

இதில் கார்த்திக்கேயனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து உள்ளார். இதுகுறித்து கார்திக்கேயனின் மனைவி மகாலெட்சுமி தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்த போலீசார் கார்த்திக்கேயனின் உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தோகைமலை அருகே மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Thokaimalai ,Nallakkaundampatti ,Karthikeyan ,Naganoor panchayat ,Thanjavur ,
× RELATED தொடர் மழைக்கு தரிசு நிலங்களில்...