×

விவசாயிகளுக்கு மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் இடுபொருள் வழங்கல்

 

கரூர், ஜூன் 14: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் விவசாயிகளுக்கு மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தமிழக முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு – வேளாண்மை துறை, கரூர் மாவட்டம் சார்பாக, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் – பசுந்தாள் உர உற்பத்தியினை ஊக்குவித்தல் தொடர்பான கலந்தாய்வு ஆலோசனை வெண்ணைமலை ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மேயர் கவிதா கணேசன் விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் துணை மேயர் தாரணி சரவணன், வேளாண் துறை அலுவலர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பயனாளர்கள் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகளுக்கு மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் இடுபொருள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Karur ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Government of Tamil Nadu ,Department of Agriculture ,Karur District ,
× RELATED கரூர் ரயில் நிலையம் வழியாக வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்