×

விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க அனுமதி ஆக்கப்பூர்வமான செயல்பாடு முதல்வருக்கு கருணாஸ் நன்றி

சென்னை: விவசாய பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் மண் எடுக்க அனுமதித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வெளியிட்ட அறிக்கை:
நீர்த்தேக்கங்கள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களிலிருந்து வட்டாட்சியர் அளவிலேயே எளிய முறையில் அனுமதி பெற்று, கட்டணமின்றி, விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுக்க அனுமதித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்கது. நீண்டகால விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அறிவிப்பால், விவசாயிகளுக்கு மட்டுமின்றி கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் தூர்வாரும் நடைமுறை எளிமையாகும். விவசாயிகளின் தேவையும் நிறைவேறும். மண் எடுப்பதால், நீர்த்தேக்கங்கள் யாவும் மேற்கண்ட செயல்முறையில் எளிதாக தூர்வாரப்படும் சூழல் உருவாகும். இது ஒன்றையொன்று சார்ந்த ஆக்கப்பூர்வமான செயல்பாடு ஆகும். இந்த புதிய நடைமுறைகளை பயன்படுத்தி வேளாண் பெருமக்கள் அனைவரும், தாம் வசிக்கும் இடத்தில் அருகில் உள்ள எந்த ஒரு நீர்நிலையில் இருந்தும் தேவைப்படும் மண்ணை எடுத்து, தமது வயல்களை வளம் பெறச் செய்யலாம். இதனால் மண் அரிப்பு தடுக்கப்படும், மழைவளம் பெருகும். விவசாயம், குடிநீர் உள்ளிட்டவைகளின் நீர் பற்றாக்குறை சரி செய்யப்படும். ஆக்கப்பூர்வமான இந்த அறிவிப்பை செய்த முதல்வருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.

The post விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க அனுமதி ஆக்கப்பூர்வமான செயல்பாடு முதல்வருக்கு கருணாஸ் நன்றி appeared first on Dinakaran.

Tags : Karunas ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Trikulathor ,LTTE ,
× RELATED விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க...