×

குவைத் தீ விபத்து துரை வைகோ இரங்கல்

சென்னை: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்ட அறிக்கை: குவைத்தில் தொழிலாளர்கள் தங்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்திய அரசு விரைந்து செயல்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையகம், குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளை தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தில் பலியான தோழர்களின் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post குவைத் தீ விபத்து துரை வைகோ இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Kuwait ,Durai Waiko ,Madhyamik ,General Secretary ,Durai Vaiko ,Tamils ,Indian government ,
× RELATED தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு...