×

அதிமுக இணைய தலைவர்கள் அழைப்பு ரோட்டில் செல்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாது: எடப்பாடி காட்டம்

கோவை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் நேற்று இரவு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 2019 தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை விட ஒரு சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது. அதிமுகவிற்கு எந்த விதத்திலும் சரிவு கிடையாது. மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் பாஜவால் எதுவும் சொல்ல முடியவில்லை. துபாய் தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 50 பேர், அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். அதிமுகவை இணைக்க ஒருங்கிணைப்பு குழு தொடங்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, ‘‘ரோட்டில் செல்பவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல தேவையில்லை’’ என்றார்.

The post அதிமுக இணைய தலைவர்கள் அழைப்பு ரோட்டில் செல்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாது: எடப்பாடி காட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi Kattam ,Coimbatore ,general secretary ,Edappadi Palanichami ,Coimbatore airport ,Chennai ,2019 election ,
× RELATED தென் சென்னை மக்கள் ஒரு நல்ல வேட்பாளரை...