×

சூதாட்ட விவகாரத்தில் கடத்தல் சம்பவம்: 4 பேர் கைது

சென்னை: கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் கொரியர் அலுவலக ஊழியரை கடத்திய தெலுங்கானாவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சவுகார்பேட்டையில் கொரியர் நடத்தி வரும் பிரிஜேஷ் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் வரை ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. கொரியர் நிறுவன உரிமையாளர் பிரிஜேஷை பழிவாங்க, அவரது ஊழியர் ராகுலை கடத்தி நசரத்பேட்டையில் சிறைவைத்திருந்தனர். தகவல் அறிந்த யானைகவுனி போலீசார் கடத்தலில் ஈடுபட்ட உதயசங்கர், மகேஷ், சாய் காந்த், மத்தூரி மகேஷை கைது செய்தனர்.

The post சூதாட்ட விவகாரத்தில் கடத்தல் சம்பவம்: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Telangana ,Brijesh ,Chaugarpettai ,Dinakaran ,
× RELATED தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்