×

குவைத் தீ விபத்தில் செஞ்சி இளைஞரின் நிலை குறித்து தகவல் எதுவும் தெரியாததால் அவரது குடும்பத்தினர் தவிப்பு

செஞ்சி: குவைத் தீ விபத்தில் செஞ்சி இளைஞரின் நிலை குறித்து தகவல் எதுவும் தெரியாததால் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். செஞ்சி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முகமது ஷெரிப் என்பவர், தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார்.

கடந்த 14 வருடமாக சில்வர் கம்பெனியில் பணியாற்றி வந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் தங்கி இருந்துள்ளார். முகமது ஷெரிப் சிகிச்சை பெறும் புகைப்படம் வலைதளங்களில் வெளியான நிலையில் அவரது புகைப்படம் அல்ல என குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். முகமது ஷெரிப்பை நேற்று முதல் மனைவி, உறவினர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். தொலைபேசியை ஷெரிப் எடுக்காத நிலையில் அவரது நிலை குறித்து அறிய முடியாமல் குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்.

முகமது ஷெரிப் குறித்த தகவலை ஒன்றிய, மாநில அரசுகள் கேட்டு தெரிவிக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post குவைத் தீ விபத்தில் செஞ்சி இளைஞரின் நிலை குறித்து தகவல் எதுவும் தெரியாததால் அவரது குடும்பத்தினர் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kuwait fire accident ,Kuwait fire ,Indians ,Kuwait ,Senchi ,
× RELATED குவைத் தீ விபத்து; தமிழர்களின் உடலை கொண்டுவர தனி விமானம் ஏற்பாடு!