×

தீப்பிடித்து எரிந்த சாலை: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: கடப்பாவில் பெட்ரோல் பங்க் அருகே சாலையில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பத்வேல்-நெல்லூர் சாலையில் உள்ள ஹெச்பி பெட்ரோல் பங்க் டேங்கரில் மழைநீர் புகுந்தது. இதனால் தண்ணீர் கலந்த பெட்ரோலை ஹேண்ட் மோட்டார் மூலம் ஊழியர்கள் சாலையில் நேற்று விட்டனர். மழைநீருடன் கலந்த பெட்ரோல் சாலையில் விடப்பட்டதால் அங்கு குப்பையில் இருந்து தீ பிடித்து சாலையில் தேங்கிய பெட்ரோலுடன் கூடிய மழை நீர் எரிய தொடங்கியது.உடனடியாக அப்பகுதி மக்கள் உதவியுடன் ஊழியர்கள் தீயை கட்டுப்படுத்தினர். பெட்ரோல் பங்க் உரிமையாளரின் அலட்சியத்தால் சாலையில் தீ பற்றி எரிந்த நிலையில் உடனடியாக அணைக்கப்பட்டதால் பெட்ரோல் பங்க்கில் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

The post தீப்பிடித்து எரிந்த சாலை: ஆந்திராவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pandemonium ,Andhra Pradesh ,Thirumalai ,Kadapa ,HP Petrol Tank Tanker ,Padvel-Nellore Road, Kadapa District, Andhra Pradesh State ,
× RELATED சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு காரணமாக...