×

எம்பியாக வெற்றி பெற்றதால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அகிலேஷ்

லக்னோ: எம்பியாக வெற்றி பெற்றதை அடுத்து எம்எல்ஏ பதவியை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்துள்ளார்.உத்தரப்பிரதேசத்தின் மெயின்புரியில் உள்ள கர்ஹால் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இருந்து வந்தார். இந்நிலையில் மக்களவை தேர்தலில் கன்னூஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து கர்ஹால் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து சட்டப்பேரவை செயலாளர் பிரதீப் குமார் கூறுகையில், ‘‘அகிலேஷ் யாதவ் மற்றும் பைசாபாத் மக்களவை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவதேஷ் பிரசாத் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர்” என்றார். அவதேஷ் பிரசாத் மில்கிபூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து சமாஜ்வாடி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் நடந்து முடிந்த மக்களவை தொகுதியில் பைசாபாத்தில் பாஜ வேட்பாளர் லல்லு சிங்கை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

The post எம்பியாக வெற்றி பெற்றதால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அகிலேஷ் appeared first on Dinakaran.

Tags : AKILESH ,MLA ,Lucknow ,Samajwadi Party ,Akilesh Yadav ,Akhilesh Yadav ,Karhal Assembly Constituency ,Mainpuri, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்...