மும்பை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “மணிப்பூரில் ஓராண்டுக்கும் மேலாக கலவரம், வன்முறை நீடிப்பது கவலை தருகிறது. தேர்தல் வெற்றி தொடர்பான பேச்சுகளை விட்டு விட்டு மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க முன்னுரிமை அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தி இருந்தார். மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, “வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நிலைமை பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் அறிவுறுத்தலுக்கு பிறகாவது மோடி மணிப்பூருக்கு செல்வாரா? அங்கு அமைதியை மீட்டெடுக்க முயற்சி செய்வாரா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை நீக்கிய பிறகு அங்கு என்ன மாற்றம் ஏற்பட்டது. இப்போதும் துப்பாக்கி சூடு, பயங்கரவாத தாக்குதல் தொடர்கிறது. பல உயிர்கள் பலியாகின்றன. இதற்கு யார் பொறுப்பு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
The post மோகன் பகவத்தே சொல்லிட்டாரே இப்பவாவது மணிப்பூருக்கு போவீங்களா மோடி?உத்தவ் தாக்கரே கேள்வி appeared first on Dinakaran.