×

திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணியே தவிர சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல: செல்வப்பெருந்தகை

சென்னை: திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணியே தவிர சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் “பொதுக்குழுவில் எனக்கு பிறகு பேசியவர்களின் கருத்துகள் திரித்து வெளியிடப்பட்டுள்ளன. காங்கிரசை வலிமைப்படுத்துவதற்கு நமக்கு கிடைத்த கருத்தியல்தான் காமராஜர் என்று குறிப்பிட்டேன். 2023-ல் தொடங்கிய கூட்டணி ஒரு தேர்தலை தவிர அனைத்து தேர்தல்களிலும் தொடர்கிறது. காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்துவது இந்தியா கூட்டணியை வலிமைப்படுத்துவதாகும்” என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

The post திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணியே தவிர சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Tags : Dimuk-Congress ,Chennai ,Tamil Nadu Congress Committee ,Congress ,Wealth ,Dinakaran ,
× RELATED பாஜக, பாமகவை மறைமுகமாக ஆதரிக்கிறது அதிமுக : செல்வப்பெருந்தகை