×

தென்கரை வாயல் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு

 

நீடாமங்கலம், ஜூன் 12: நீடாமங்கலம் அருகில் உள்ள தென்கரை வாயல் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.நீடாமங்கலம் ஒன்றியத்தில் 2024-2025ம் கல்வியாண்டின் முதல் வேலை நாளான 10ம் தேதி ஒன்றியத்தில உள்ள 92 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில், விலையில்லா பாட நூல்கள், குறிப்பேடுகள், எண் ணும், எழுதும் பயிற்சி ஏடுகள்,மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

தென் காரவயல் ஊரா ட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1ம் வகுப்பில் புதிதாக சேர்ந்த குழந்தைகள் அனைவருக்கும் மலர் மாலை அணிவித்து பூங்கொத்துகள் கொடுத்து இனிப்புகள் வழங்கி மேளதாளத்துடன் வரவேற்கப்பட்டது. இவ்விழாவில் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பெருமை சேர்த்தனர்.

சிறப்புமிக்க இவ்விழாவில் நீடாமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலர் ந.சம்பத்கலந்துகொண்டு விலையில்லா பாடநூல்களையும், குறிப்பேடுகளையும் வழங்கி பள்ளியை பார்யிட்டு ஆய்வு செய்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அனைவரும் செய்திருந்தனர். முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தலைமையாசிரியர் தர்மராஜ் வரவேற்றார். இறுதியாக பட்டதாரி ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினார்.

The post தென்கரை வாயல் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Tenkarai Wayal Government School ,Needamangalam ,Tenkarai Wayal School ,Needamangalam Union ,Dinakaran ,
× RELATED நீடாமங்கலம் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கம்