×

மேலநம்மங்குறிச்சி, உப்பூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

 

முத்துப்பேட்டை, ஜூன் 12: முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி, உப்பூர் கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி, உப்பூர் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஹமீது அலி, மன்னார்குடி கோட்ட இணை இயக்குனர் டாக்டர் ஆறுமுகம், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் சுப்பிரமணியன் ஆகியோர் வழிக்காடுதலின் பேரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

முகாமில் டாக்டர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவக்குழுவில், உதயமார்த்தாண்டபுறம் கால்நடை டாக்டர் செல்வகுமார், ஓதியதூர் டாக்டர் காயத்திரி, இடும்பாவனம் டாக்டர் மகேந்திரன், கால்நடை ஆய்வாளர்கள் ஜெகநாதன், நிர்மலா கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பிரசன்னா, சத்தியசீலன், மகாலட்சுமி மாதவன் தமிழ்ச்செல்வி, ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் 850 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தினர், முகாமில் மூன்று மாத கன்று குட்டிகள் முதல் 8 மாத சினை மாடுகள் வரை அணைத்து மாடுகளுக்கும் தடுப்போசி செலுத்தப்பட்டது. மேலும் காது வில்லைகள் அணிவிக்கப்பட்டு பதிவுகள் செய்யப்பட்டது. இந்த முகாம்க்கான ஏற்பாடுகளை மேலநம்மங்குறிச்சி, உப்பூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் செய்திருந்தனர்.

The post மேலநம்மங்குறிச்சி, உப்பூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Tags : Melasma Vaccination Camp ,Melanmankurichi, Uppur ,Muthuppet ,Uppur village ,Melanammangurichi ,Muthupet ,Tiruvarur District ,Melanmankurichi, Uppur village ,District Collector ,Sarusree ,Animal Husbandry Department Zonal ,Leprosy ,Uppur, Melanmankurichi ,Dinakaran ,
× RELATED தண்ணீர் நிரம்பி இருப்பதால்...