×

உடையார்பாளையம் நகர ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு கூட்டம்

 

ஜெயங்கொண்டம் , ஜூன் 12: உடையார்பாளையம் நகர அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு கூட்டம் உடையார்பாளையம் தனியார் திருமண மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். பெரியசாமி, சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர். செங்கமுத்து வரவேற்றார்.

தலைவர் தனது முன்னுரையில் உறுப்புபினர்கள் சங்க வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவும் கூட்டத்திற்கு தவறாமல் வருகை தந்து சிறப்பிக்கவும் கேட்டுக் கொண்டார். ரெங்கநாதன் “சும்மா” என்ற தலைப்பில் இலக்கியச்சான்றுடன் கந்தர் அனுபூதி பாடல் சொல்லி விளக்கம் அளித்தார். விஸ்வநாதன் திருவாசகத்தில் சிவபுராணம் பற்றி பேசி பொருள் உணர்ந்து படிக்க வேண்டும்.

அதனால் நன்மைகள் பல உண்டு என்று விளக்கம் கொடுத்து பேசினார். அண்ணாமலை திருக்குறளில் உவமைப்பற்றி காலத்தினால் செய்த உதவி என்ற குறளை சொல்லி பொருத்தமான உவமைக்காட்டி திருக்குறளில் திருவள்ளுவர் கையாண்ட விதம் பற்றி பேசினார். சென்ற மாத அறிக்கையிணை அண்ணாமலை வரவு செலவு கணக்கிணை .சோமசுந்தரம் வாசித்தார். முடிவில் பெரியசாமி நன்றி கூறினார்.

The post உடையார்பாளையம் நகர ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Federation of Pensioners of Utarpalayam City ,Jayangondam ,All-India Federation of Senior Citizens and Pensioners ,Udaiarpalayam ,Annamalai ,Peryasami ,Uyarpalayam City Pensioners' Federation ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் பகுதி சிவன்கோயில்களில் பிரதோஷ வழிபாடு