×

பெரும்புதூர் அருகே பரபரப்பு தீப்பற்றி எரிந்த கார் நாசம்

பெரும்புதூர், ஜூன் 12:
பெரும்புதூர் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார் நாசமானது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பெரும்புதூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (42). இவர், நேற்று முன்தினம் இரவு தனக்கு செந்தமான காரில், சிங்கபெருமாள் கோவிலில் இருந்து பெரும்புதூர் நோக்கி சென்றார். காரை மதுரமங்கலத்தை சேர்ந்த ஏழுமலை (40) என்பவர் ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். பெரும்புதூர் – சிங்கபெருமாள் கோவில் சாலையில், ஒரகடம் அருகே சென்றபோது, காரின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதனால், டிரைவர் ஏழுமலை காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, இருவரும் உடனடியாக கீழே இறங்கினர். இதையடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற ஒரகடம் தீயணைப்புத்துறை வீரர்கள், கொழுந்துவிட்டு எரிந்த காரில் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள், கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஒரகடம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெரும்புதூர் அருகே பரபரப்பு தீப்பற்றி எரிந்த கார் நாசம் appeared first on Dinakaran.

Tags : Perumbudur ,Jegadish ,Perumbudur Mettutheru ,Singaperumal ,
× RELATED நிர்வாண நிலையில் கை, கால்கள்...