×

ஜன்னலில் சாவியை வைத்துவிட்டு சென்றதால் வீட்டின் பூட்டை திறந்து ரூ.2.30 லட்சம், 2 சவரன் நகை திருட்டு

வேளச்சேரி: அடையாறு பகுதியில் ஜன்னல் அருகே வைத்திருந்த சாமியை எடுத்து வீட்டின் பூட்டைத் திறந்து ரூ.2.30 லட்சம் ரொக்கம் மற்றும் 2 சவரன் நகை திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை அடையாறு, கெனால்பேங்க் சாலையைச் சேர்ந்தவர் செல்வி (58). வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகள் வேலைக்குச் செல்வதால் தினமும் வீட்டை பூட்டிக்கொண்டு சாவியை ஜன்னலில் வைத்துவிட்டுச் செல்வது வழக்கமாம். இந்நிலையில், நேற்று முன்தினம் செல்வி வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஜன்னலில் வைத்துவிட்டுச் சென்றார். வேலைக்குச் சென்ற மகள் இரவு வீட்டிற்கு வந்தார்.

அப்போது, வீட்டின் பூட்டு திறக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.2.30 லட்சம் ரொக்கம், 2 சவரன் நகை திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post ஜன்னலில் சாவியை வைத்துவிட்டு சென்றதால் வீட்டின் பூட்டை திறந்து ரூ.2.30 லட்சம், 2 சவரன் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Adyar ,Sami ,Canal Bank Road, Adyar, Chennai.… ,Dinakaran ,
× RELATED ஜன்னலில் சாவியை வைத்துவிட்டு...