×

மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்

ராசிபுரம், ஜூன் 12: ராசிபுரம் வட்டம் வி.நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று \”பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு\” திட்ட முகாம் நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவ, மாணவிகள் கலெக்டருக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து ஆதார் பதிவு முகாம் நடைபெறுவதை பார்வையிட்ட கலெக்டர், வகுப்பறைக்கு சென்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். இன்று(12ம்தேதி) பெரிய மணலி, பொட்டிரெட்டிப்பட்டிதொடக்கப்பள்ளி, வெங்கமேடு நடுநிலைப்பள்ளி, கொல்லிமலை மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி, குருக்கலாம்பாளையம் நடுநிலைப்பள்ளி, மோகனூர் தொடக்கப்பள்ளி, நாமகிரிப்பேட்டை நடுநிலைப்பள்ளி, பெரியப்பட்டி, கிருஷ்ணபுரம், சி.என்.பாளையம், ஆவாரங்காடு தொடக்கப்பள்ளிகள், ஜெங்கமநாயக்கன்பட்டி நடுநிலைப்பள்ளி, களங்காணி ஆதி திராவிடர் நல பள்ளி, ராசிபுரம், வி.நகர், நகராட்சி நடுநிலைப்பள்ளி, துத்திக்குளம் நடுநிலைப்பள்ளி, சாணார்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, வெண்ணந்தூர் தொடக்கப்பள்ளி ஆகிய 17 பள்ளிகளில் “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு\” திட்ட முகாம் நடைபெறுகிறது. இந்த ஆய்வில் நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,V. Nagar ,Municipal Middle School ,Rasipuram District ,District Collector ,Uma ,Dinakaran ,
× RELATED விவசாயி பையில் கொண்டு சென்ற ரூ.500...