×

அஷ்ட வாராகி கோயிலில் சிறப்பு பூஜை

காரிமங்கலம், ஜூன் 12: காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள, அஷ்ட வாராகிஅம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் பூஜையில் பங்கேற்று, தேங்காய் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் வளையல், மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைவர் கே.பி அன்பழகன் எம்எல்ஏ, தாளாளர் மல்லிகா அன்பழகன், நிர்வாக இயக்குனர் வித்யாரவி சங்கர், நிர்வாக அலுவலர் தனபால் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

The post அஷ்ட வாராகி கோயிலில் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Ashta Waragi Temple ,Karimangalam ,Amman ,Varapirai Panchami ,Ashta Varaki Amman Temple ,Kerakodaalli Thanappa Counter Matric School Complex ,
× RELATED கூட்டுறவு சங்க செயலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா