×

யோகா ஒலிம்பியாட் போட்டி

விருதுநகர், ஜூன் 12: விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான யோகா ஒலிம்பியாட் தேர்வு போட்டிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா முன்னிலையில் நடைபெற்றது.

போட்டியில் 6 முதல் 8ம் வகுப்பு, 9 மற்றும் 10ம் வகுப்பு என இரு பிரிவுகளில் நடத்தப்பட்ட யோகா போட்டியில் 150 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜூன் 14ல் மதுரையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறுவர். மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

The post யோகா ஒலிம்பியாட் போட்டி appeared first on Dinakaran.

Tags : Yoga Olympiad Competition ,Virudhunagar ,District Principal Education Officer ,Varamathi ,District Education Officer ,Indira ,olympiad ,Virudhunagar District Sports Hall ,School Education Department ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டத்தில் மீண்டும்...