×

மல்லிகைப்பூ கிலோ ரூ.1000க்கு விற்பனை

மதுரை, ஜூன் 12: மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. மதுரை மாவட்டத்தை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக செடிகளில் அறுவடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பூக்களின் வரத்து குறைந்தது. இதோடு, தொடர் முகூர்த்த தினத்தையொட்டி பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இதில் மல்லிகை பூ கிலோ ரூ.1000க்கும், கனகாம்பரம் ரூ.2000க்கும், முல்லை ரூ.450, பிச்சி ரூ.600க்கும், ரோஜா ரூ.150க்கும், சம்மங்கி ரூ.200க்கும், துளசி ரூ.50க்கும் விற்பனையாகிறது.

The post மல்லிகைப்பூ கிலோ ரூ.1000க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Mattuthavani ,
× RELATED வரத்து குறைவால் உயரும் காய்கறிகள் விலை