×

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

 

திருப்பூர், ஜூன் 12: திருப்பூர் மாவட்டத்தில் புகையிலை, போதைப்பொருட்களை தடுக்கும் வகையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஆய்வின் போது குட்காக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதனை விற்பனை செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் லட்சுமி நகர் மில்லர் ஸ்டாப், மும்மூர்த்தி நகர், ஏ.பி.டி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை மற்றும் ஆய்வாளர் தங்கவேல் உள்ளிட்ட அதிகாரிகள் பெட்டிக்கடைகள் உள்ளிட்டவைகளில் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட கூல்லிப் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கேரளாவை சேர்ந்த முகமது பர்கான் (23) என்பவரை போலீசார் கைது செய்ய அதிகாரிகள் பரிந்துரைத்தனர். மேலும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 25 கிலோ குட்கா பொருட்களும், காலாவதியான 30 கிலோ பிஸ்கட் பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டது.

The post புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Food Safety Department ,Gutkas ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில்...