×

உடல் முழுவதும் பேனாவால் குத்தி மூதாட்டி கொலை

விருதுநகர்: உடல் முழுவதும் பேனாவால் குத்தி மூதாட்டியை கொலை செய்த சைக்கோ கொலையாளியை போலீசார் தேடி அருகின்றனர்.  விருதுநகர் ராமமூர்த்தி ரோடு மேம்பாலத்திற்கு அருகில் உள்ள வீட்டில் வேலம்மாள் (74) என்ற மூதாட்டி கணவர் குருசாமி இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் சாலையின் மறுபுறம் உள்ள காம்பவுண்ட் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று பிற்பகல் 3 மணியளவில் மகள் சாப்பாடு கொடுத்துவிட்டு, அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.

மாலை 6 மணிக்கு மேல் தாயை பார்க்க மகள் வந்தார். அப்போது, வேலம்மாள் உடல் முழுவதும் பேனாவால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார். கழுத்தில் பேனா குத்திய நிலையில் இருந்துள்ளது. தகவலறிந்து வந்த விருதுநகர் கிழக்கு போலீசார் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி சைக்கோவாக இருக்கலாம் என்ற போலீசார் சந்தேகிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டு மர்மநபரை தேடி வருகின்றனர்.

The post உடல் முழுவதும் பேனாவால் குத்தி மூதாட்டி கொலை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Velammal ,Ramamurthy Road ,Kuruswamy ,
× RELATED விருதுநகர் மாவட்டம்...