×

திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல், ஜூன் 12: திண்டுக்கல் அருகே பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் பூங்கொடி திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இவை தரமாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, பொருட்களின் இருப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்தேன். மேலும் மே மாதத்தில் பாமாயில், துவரம் பருப்பு பெறாதவர்கள் இந்த மாதம் சம்பந்தப்பட்ட கடைகளில் பெற்று கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.

The post திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Dindigul Boodipuram ,Dindigul ,Collector ,Poongodi ,Poothipuram ,Dindigul district ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...