- ஆரோன் ஜோன்ஸ்
- பாக்கிஸ்தான்
- நியூயார்க்
- கனடா
- டி20 உலகக் கோப்பை பிரிவு ஏ
- நாசாவ் கவுண்டி ஸ்டேடியம்
- தின மலர்
நியூயார்க்: பாகிஸ்தான் அணியுடனான டி20 உலக கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், கனடா அணி தொடக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். நஸ்ஸாவ் கவுன்டி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசியது. ஆரோன் ஜோன்ஸ், நவ்னீத் தலிவால் இணைந்து கனடா இன்னிங்சை தொடங்கினர். ஆரோன் ஜோன்ஸ் ஒரு முனையில் அதிரடியாக விளையாட… தலிவால் 4, பர்கத் சிங் 2, கிர்டன் 1, ஷ்ரேயாஸ் மொவ்வா 2, ரவிந்தர்பால் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர். சக வீரர்கள் ஏமாற்றமளித்த நிலையில், தனி ஒருவனாகப் போராடிய ஆரோன் 52 ரன் (44 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி நசீம் ஷா வேகத்தில் கிளீன் போல்டானார். கேப்டன் சாத் பின் ஜாபர் 10 ரன்னில் வெளியேறினார். கனடா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்தது. கலீம் சனா 13 ரன், டைலன் ஹேலிகர் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ராவுப், முகமது ஆமிர் தலா 2, நசீம் ஷா, ஷாகீன் அப்ரிடி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.
The post பாகிஸ்தானுக்கு எதிராக ஆரோன் ஜோன்ஸ் அரைசதம் விளாசல் appeared first on Dinakaran.