×

கட்டணம் கேட்டதால் ஆத்திரம் சுங்க சாவடியை புல்டோசரில் இடித்து உடைத்த ‘குடி’மகன்

ஹபூர்: உத்தரப்பிரதேசத்தின் பில்குவாவில் உள்ள சஜர்சி சுங்க சாவடியில் ஹபூரில் செங்கல் சூளையில் இருந்து புல்டோசரை தீரஜ் என்பவர் ஓட்டி வந்தார். சோதனை சாவடியை கடப்பதற்கு அங்குள்ள ஊழியர் அவரிடம் சுங்க கட்டணம் கட்டும்படி கூறினார். ஆனால் கட்டணத்தை கட்ட மறுத்து புல்டோசர் ஓட்டுனர் தீரஜ் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், ஊழியர்கள் இருக்கும் இரண்டு அறைகளை புல்டோசரால் இடித்து தள்ளி விட்டு தப்பி சென்றார். இந்த சம்பவத்தின் போது தீரஜ் மது அருந்தி இருந்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில் அங்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தீரஜை கைது செய்தனர். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

The post கட்டணம் கேட்டதால் ஆத்திரம் சுங்க சாவடியை புல்டோசரில் இடித்து உடைத்த ‘குடி’மகன் appeared first on Dinakaran.

Tags : Hapur ,Dheeraj ,Sajarsi customs post ,Bhilkwa, Uttar Pradesh ,
× RELATED உ.பியில் சுங்கச்சாவடியில் கட்டணம்...