×

கடைக்குள் புகுந்த பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்றுமுன்தினம் பிற்பகலில், தேனிக்கு அரசு பஸ்சை டிரைவர் பழனிச்சாமி ஓட்டிச் சென்றார். பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே வந்தபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து, எதிரே இருந்த சுவீட் கடைக்குள் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடையின் முன்புறம் முழுவதுமாக சேதம் அடைந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கவனக்குறைவாக பஸ்சை இயக்கிய டிரைவர் பழனிச்சாமியை சஸ்பெண்ட் செய்து திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் நேற்று உத்தரவிட்டார்.

The post கடைக்குள் புகுந்த பஸ் டிரைவர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Palanichami ,Theni ,Dinakaran ,
× RELATED தொடர் தோல்விகளால் எடப்பாடி...