×

முக்கொம்பு கதவணையில் பராமரிப்பு பணி: கொள்ளிடத்தில் 1,200 கன அடி தண்ணீர் திறப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு தடுப்பணையில் இருந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகள் பிரிந்து செல்கிறது. முக்கொம்பு காவிரி ஆற்றின் கதவணைகள் பராமரிப்பு பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடந்து வருகிறது. இந்த பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 வாரங்களாக பெய்த மழையால் முக்கொம்புக்கு அதிகளவில் மழைநீர் வந்தது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றின் தடுப்பணைக்கு வந்ததால் கடந்த ஒரு வாரமாக கதவணை பராமரிப்பு பணி பாதிக்கப்பட்டது.

இதனால் காவிரிக்கு செல்லும் தண்ணீரை தடுத்து முக்கொம்பில் இருந்து தடுப்பணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. மேட்டூரில் இருந்து வரும் 1200 கன அடி தண்ணீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 2 நாட்களாக திறந்து விடப்படுகிறது. இதனால் வறண்டு கிடந்த கொள்ளிடத்தில் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், முக்கொம்பு தடுப்பணையில் காவிரி ஆற்றின் கதவணைகள் பராமரிப்பு பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் 10 நாட்களில் பராமரிப்பு முழுமையாக நிறைவடையும். கடந்த 2 நாட்களாக கொள்ளிடத்தில் 1200 கடி அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்றனர்.

The post முக்கொம்பு கதவணையில் பராமரிப்பு பணி: கொள்ளிடத்தில் 1,200 கன அடி தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Mukhombu Kathavana ,Kolt. ,Trichy ,Cauvery ,Kollidam ,Mukkombu ,Trichy district ,Mukkombu Cauvery ,Mukkombu Kathavana ,Kollid ,Dinakaran ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்