×

நாட்றம்பள்ளி அருகே 2 கார்கள் மோதிய விபத்தில் சிறுவர்கள் உட்பட 11 பேர் படுகாயம்

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் மோதிய விபத்தில் பயணம் செய்த 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் சுரேஷ்(29), அவரது நண்பர்கள் அசோக்(32), பாபு(28), திலிப்(30), புருஷோத்தமன்(28), மனோஜ்(28) ஆகியோர் பள்ளி கொண்டா பகுதியில் நடைபெறும் நண்பரின் திருமணத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை திருமணம் முடிந்த பின்னர் நேற்று மதியம். மீண்டும் ஓசூர் நோக்கி காரில் சென்றுள்ளனர்.இந்நிலையில் மனோஜ் கார் ஓட்டி சென்றுள்ளார். கார் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டபட்டி சர்க்கரை ஆலை அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற திண்டுக்கல் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (40), இவர் நெல்லூர் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரண்யா(37), குழந்தைகள் முகில் ஆதி(11),சிபியுகன்(5) மற்றும் தங்கராஜின் தந்தை ஜெகதீஷ்(68) நெல்லூர் நோக்கி சென்றனர்.

இந்நிலையில் காரை தங்கராஜ் ஒட்டி சென்றார். இவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர் திசையில் ஓசூர் நோக்கி சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு கார்களில் பயணம் செய்த 11 பேர் படுகாயங்களுடன் கார்களில் சிக்கி கொண்டனர். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று காரில் சிக்கிக்கொண்ட 11 பேரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கிய இரண்டு கார்களும் அப்பளம் போல் நொறுங்கி சாலையின் குறுக்கே நின்றதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கிய கார்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்து குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு கார்களின் விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதித்து.

The post நாட்றம்பள்ளி அருகே 2 கார்கள் மோதிய விபத்தில் சிறுவர்கள் உட்பட 11 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Nadrampalli ,Nadrampalli National Highway ,Suresh ,Hosur ,Krishnagiri district ,Ashok ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டாம்,...