×

நாட்டிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமைகள் அதிகம்: அதிமுக பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: நாட்டிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் என கோவை சத்யன் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கான கருவி ஒன்றை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ளதாக அதிமுக ஐடி பிரிவு மண்டல செயலாளர் கோவை சத்யன் பதிவிட்டுள்ளார். தாங்கள் கண்டுபிடித்த கருவியை பயன்படுத்தி பாலியல் வன்கொடுமைகளை தடுக்க ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

நாட்டிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் என கோவை சத்யன் குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மராட்டியத்தில் அதிக பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. 2021-ம் ஆண்டு நாடு முழுவதும் நடந்த 31,516 பாலியல் வன்கொடுமைகளில் ராஜஸ்தானில் மட்டும் 6337 வன்கொடுமைகள் நடந்துள்ளன. 2021-ல் உத்தரப்பிரதேசத்தில் 2845 மத்தியப்பிரதேசத்தில் 2947, மராட்டியத்தில் 2496 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுக பாஜக மோதல் நிலவும் நிலையில் கோவை சத்யன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

The post நாட்டிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமைகள் அதிகம்: அதிமுக பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Govai Sathyan ,Gowai Sathyan ,Regional Secretary of ,IT ,Division ,
× RELATED போலி ஆவணம் தயாரித்த வழக்கு: பாஜக மண்டல் தலைவர் கைது