×

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம்..!!

சென்னை: நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மே மாதம் நடந்த நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக இந்திய மாணவர் சங்கம் குற்றச்சாட்டு வைத்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் ஆவேச போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்த மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யும் போது போலீசார் மாணவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

The post நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Indian Students' Association ,Trichy ,Madurai ,Goa ,Thoothukudi ,Namakkal ,NEET ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...