×

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் குறுவை நெல் சாகுபடியில் களை எடுக்கும் பணி தீவிரம்

 

தஞ்சாவூர், ஜூன் 11: தஞ்சாவூர் மாவட்டத்தில் முக்கிய சாகுபடி பயிராக நெல் உள்ளது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, அம்மையகரம் ஆகிய பகுதிகளில் குறுவை வயல்களில் களை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் களை எடுக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். காலை வேளையில் வெயில் அடித்தாலும் மாலையில் மழை பெய்கிறது. இதனால் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

The post திருக்காட்டுப்பள்ளி பகுதியில் குறுவை நெல் சாகுபடியில் களை எடுக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kuruvai ,Thirukkattupalli ,Thanjavur ,Thanjavur district ,Tirukkatupalli ,
× RELATED டெல்டாவில் குறுவை சாகுபடியில் மந்தம்...