×

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பலூன் கொடுத்து உற்சாக வரவேற்பு

 

புதுக்கோட்டை,ஜூன் 11: கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பலூன் கொடுத்து உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டடது. புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு படிப்பின் முக்கியத்துவம் காலை உணவு திட்டம் குறித்த வரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் படம் பதித்த வண்ண பலூன்களையும் ரோஜா மலர்களையும் கொடுத்தும் மலர் தூவியும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் பள்ளிக்கு வந்த மாணவர்கள் கோடை விடுமுறை முடிந்து உற்சாகமாக பள்ளிக்கு வந்துள்ளதாகவும் சில மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் பல்வேறு சலுகைகள் இருப்பதாலும் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகள் இருப்பதாலும் அரசு பள்ளியில் சேர முக்கியத்துவம் கொடுத்ததாகவும் முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பலூன் கொடுத்தும் ரோஜா பூக்களை தூவையும் வரவேற்பளித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.

அதேபோல் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ள நிலையில் முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மலர் தூவையும் பலூன்கள் கொடுத்தும் மாணவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சியுடன் வரவேற்றதாக தெரிவித்தனர்.

The post கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பலூன் கொடுத்து உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Tamil Nadu ,Thilakar Thital ,Pudukottai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை...