×

ராஜபாளையம் கம்மாபட்டியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

ராஜபாளையம், ஜூன் 11: ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முதல் நெல் போகம் முடிந்த நிலையில் தொடர் மழை காரணமாக நீர் நிலைகளில் அதிகளவு நீர் தேங்கி இருப்பதால் விவசாயிகள் இரண்டாம் நெல் போகம் பயிரிடப்டு வருகின்றனர். இதற்கிடையே முதல் போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறகக் வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை ஏற்று ராஜபாளையம் அருகே கம்மாபட்டி பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேற்று அரசு நேரடி நெல் கொள்முதல் திறப்பு விழா நடைபெற்றது. ராஜபாளையம் வேளாண் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்து நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் விவசாய சங்க தலைவர்கள் ராமசந்திர ராஜா, நாகராஜ், அம்மையப்பன், ராதா கிருஷ்ணப்பராஜா மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post ராஜபாளையம் கம்மாபட்டியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Rajapalayam Kammapatti ,Rajapalayam ,Rajapalayam Paddy Purchase Station ,Kammapatti ,
× RELATED ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்