×

விருதுநகரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

 

விருதுநகர், ஜூன் 11: விருதுநகர் அருகே தியாகராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வச்சக்காரப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே டூவீலரில் வந்தவரை போலீசார் மறித்தனர். ஆனால் அந்நபர் தப்பிக்க முயன்றார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கோவிந்தநல்லூரை சேர்ந்த முத்துக்குமார் (21) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை சோதனை செய்த போது 4 கிராம் எடையிலான 52 பொட்டலங்களில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் முத்துக்குமாரை கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், அதிவீரன்பட்டியை சேர்ந்த கண்ணாடி சிவா என்பவரிடம் கஞ்சா வாங்கி பள்ளி மாணவர்கள், சிறுவர்கள், கூலித்தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. போலீசார் கண்ணாடி சிவாவை தேடி வருகின்றனர்.

The post விருதுநகரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Vachakkarapatti ,Thiagarajapuram Government High School ,
× RELATED விருதுநகர் லாட்ஜில் தங்கி உல்லாசம்...