×

மயிலாடும்பாறை அருகே மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

வருசநாடு, ஜூன் 11: மயிலாடும்பாறை அருகே மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மயிலாடும்பாறை அருகே பொன்னம்படுகையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி சீதா (32). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். சீதா பொன்னம்படுகையைச்சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர் அந்த கடைக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.

இதனையும் மீறி சீதா தொடர்ந்து வேலைக்கு சென்று வந்ததால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் சீதாவை ஜெயக்குமார் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சீதா தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சீதாவின் தாயார் பஞ்சவர்ணம் கொடுத்த புகாரில் மயிலாடும்பாறை போலீசார் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post மயிலாடும்பாறை அருகே மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Mayilatumparai ,Varusanadu ,Mailadumparai ,Jeyakumar ,Sita ,Ponnampadugai ,Mayiladumparai ,Elangovan ,Sita Ponnampadugai ,
× RELATED மயிலாடும்பாறை அருகே புதிய தார்ச்சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை