×

நெருப்பெரிச்சல் பகுதியில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட மாநகராட்சி மேயர்

 

திருப்பூர், ஜூன் 11: நெருப்பெரிச்சல் பகுதியில் விபத்தில் சிக்கியவர்களை மாநகராட்சி மேயர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மனித நேயமிக்க செயல் பொதுமக்கள் பாராட்டுகளை பெற்று வருகிறது. திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தினமும் மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதுபோல் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது நெருப்பெரிச்சல் பகுதியில் சென்ற போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வெள்ளியங்கிரி, மல்லிகை தம்பதியர் விபத்தில் சிக்கினர். இதனை அறிந்த மேயர் தினேஷ்குமார் உடனடியாக காரை நிறுத்தி, விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து மேயரின் மனித நேயமிக்க செயல் பொதுமக்கள் பாராட்டுகளை பெற்று வருகிறது.

 

The post நெருப்பெரிச்சல் பகுதியில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட மாநகராட்சி மேயர் appeared first on Dinakaran.

Tags : Municipal Corporation ,Tirupur ,Tirupur Corporation ,Mayor ,Dinesh Kumar ,Dinakaran ,
× RELATED பெண்ணை கடித்து குதறிய வெறிநாய்களை பிடித்து சென்ற தனியார் அமைப்பினர்