×

கடற்கரை கிராமங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

 

ராமநாதபுரம், ஜூன் 11: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் 10.6.2024 பிற்பகல் 5.30 மணி முதல் 12.6.2024 அன்று இரவு 11.30 மணி வரை கடலில் 2.7 மீட்டர் முதல் 3.0 மீட்டர் உயரம் வரை பேரலைகள் எழும்பக்கூடும். மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசப்படும் எனவும், இந்திய வானிலை மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கடற்கரையை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரையோர கிராமங்களின் கடலில் அருகில் செல்லவோ, கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளவோ, கடலில் இறங்கி குளிக்கவோ கூடாது. மேலும் 14.6.2024 வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மீனவர்கள் தங்கள் படகுகளை சேதம் அடையாமல் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post கடற்கரை கிராமங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram District ,Collector ,Vishnu Chandran ,
× RELATED ராமநாதபுரம் அருகே ஹீப்ரு மொழி கல்வெட்டு கண்டுபிடிப்பு