×

மிளகாய் உலர் களம் வேண்டும்: விவசாயிகள் வேண்டுகோள்

 

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 11: தமிழகத்திலேயே அதிகமான மிளகாய் விளையக்கூடிய பகுதிகளில் ஆர்.எஸ்.மங்கலம் சுற்று வட்டாரப் பகுதி மிகவும் முக்கியமான பகுதியாகும். இப்பகுதியில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மக்களின் வாழ்வாதாரமாக மிளகாய் விவசாயம் உள்ளது குறிப்பிடதக்கது. இந்நிலையில் மிளகாய் பழங்களை பறித்து உலர்த்துவதற்கு விவசாயிகளுக்கு சரியான உலர் களங்கள் இல்லாத நிலை உள்ளது.

இதனால் விவசாயி தங்கள் தங்கள் தோட்டங்களில் விளைவித்து பறித்த மிளகாய் பழங்களை காடு, மேடு, வயல்வெளிகளில் உலரப்போடுவதால் மிளகாய் காய்ந்த பின்னர் அந்த மிளகாய் வத்தல் கலர் மங்கிய நிலையிலும், அதிகமான மிளகாய் வெள்ளை நிறமாக பழுப்படைந்து விடுவதாலும் மிளகாய் வத்தலுக்கு உரிய விலை கிடைக்காமல் போய் விடுவதாகவும், கஷ்டப்பட்டு விளைவித்து பயனில்லாமல் போய் விடுவதாகவும் விவசாயிகள் புலம்புகின்றனர்.

இதற்கு ஒரு தீர்வாக உலர்களம் அமைத்துக் கொடுத்தால் மிளகாய் வத்தல் கலர் மங்காமல் நல்ல சிகப்பு நிறமாக இருக்கும். அவ்வாறு சிவப்பு மங்காமல் இருக்கும் மிளகாய் வத்தலுக்கு அதிகபட்சம் விலை கிடைக்க வாய்ப்பாக இருக்கும் என விவசாயிகள் கூறினர். விவசாயிகளின் வாழ்வாதரம் செழிக்க, விவசாயிகளின் நலன் கருதி அரசு சார்பாக கிராமங்கள் தோறும் உலர் களங்களை அமைத்துக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என விவசாயப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மிளகாய் உலர் களம் வேண்டும்: விவசாயிகள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,RS Mangalam district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பாத்ரூம் பகுதியில் வாகனங்கள்...