×

நெடுஞ்சாலைத்துறையினர் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு,ஜூன்11: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புகொடி ஏந்தி நெடுங்சாலைத்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் வழங்க வேண்டும்.நெடுஞ்சாலைத்துறையில் நிரந்தர பணியிடங்களில் ஓய்வு பெற்ற ஊழியர்களை கொண்டு நிரப்ப கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் ஈரோட்டில் நேற்று கருப்பு கொடியேந்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மூலப்பாளையத்தில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ராஜேந்திரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜய மனோகரன் துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் சிங்கராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாபு நன்றி கூறினார்.

The post நெடுஞ்சாலைத்துறையினர் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : highway department ,Erode ,Highways Department ,State Highway Authority ,Dinakaran ,
× RELATED நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க எதிர்ப்பு சாலைப்பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்