×

சூதாடிய 5 பேர் கைது

 

ஈரோடு,ஜூன்11: ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலை சிஇஓ அலுவலகம் அருகே சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், ஈரோடு தெற்கு போலீசார் அங்கு சென்று பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த 5 நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் ஈரோடு ஜின்னா வீதியை சேர்ந்த முகமது இசாக் (61),ஈரோடு சொக்கநாத வீதியை சேர்ந்த சதீஸ்குமார் (51),ஈரோடு சூளை விஜிபி நகரை சேர்ந்த அன்சார்(57),நசியனூர் ஷாஜகான்(50),ஈரோடு விவிசிஆர் நகர் சேகர்(52)ஆகியோர் என்பது தெரியவந்தது.  இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் ரூ.2,050 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

The post சூதாடிய 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Old Railway Station Road ,Erode South ,Dinakaran ,
× RELATED பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது